கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்! (Beet Leaves)
பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன
சுவையான கீரை
பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பரும்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.
கரோட்டின் உயிர்சத்து
பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.
புரதம், தாது உப்புக்கள்
பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.
பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.
கண்நோய்கள் குணமாகும்
உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
_________________________________________________________________________________________________
வேப்பிலை : குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.
துளசி இலை : கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.
வெற்றிலை : அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.
கடுகு இலை: இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.
பாகல் இலை : தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.
முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.
பப்பாளி இலை: பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.
புளிய இலை: இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.
புதினா இலை : சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
முந்திரி இலை: தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.
கறிவேப்பிலை : முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.
ஆமணக்கு இலை : தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.
யூகலிப்டஸ் இலை : எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது.
________________________________________________________________________________________________________
உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:-
சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாம்:
பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
தேநீர்:
உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.
அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்:
மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.
இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
பால்:
பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
ஓட்ஸ்:
நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்:
மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.
____________________________________________________________________________________________
BANANA
ஆண்மையை வலுவூட்டும் செவ்வாழைப்பழம்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும்
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
தொற்றுநோய் தடுக்கப்படும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
__________________________________________________________________________